சனி, 20 ஜூன், 2009

சுத்த சன்மார்க்க நெறிகள்.

  • கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆவார்
  • சிறு தெய்வ வழிபாடு தவிர்த்தல் வேண்டும், தெய்வத்தின் பெயரால் உயிர் பலியிடக்கூடாது
  • பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல்
  • உலக அமைதிக்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டை கடை பிடிக்க வேண்டும்.
  • மது, மாமிசம் உண்ணாதிருத்தல் வேண்டும்
  • சாதி, மதம், இனம் சமயம் முதலிய வேறுபாடுகளின்றி இருத்தல் வேண்டும்
  • எவ்வுயிரையும் தம்முயிர்போல எண்ணி ஆன்மநேய ஒருமைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
  • உயிர் அடக்கம் கொண்டவர்களை எரிக்காது புதைத்தல் வேண்டும்
  • எக்காரியத்திலும்,சுயநலமில்லாது பொது நல நோக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்
  • எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று எண்ண வேண்டும்